Fwd: Article about "RANE" in Nanaya vikatan

  Ramesh A
  karma level 13606


செ ன்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதலே சென்னை நகரில் வலம் வர ஆரம்பித்துவிட்டன கார்கள் . 1901- ம் ஆண்டில் சென்னையில் முதல் கார் ஓடியது . பாரி அண்ட் கோ நிறுவனத்தின் இயக்குநராக இருந்த . ஜே . யார்க் என்கிற வெள்ளைக்காரர் தன் அடையாறு பங்களாவிலிருந்து பாரீஸ் கார்னரில் இருக்கும் அலுவலகத்துக்கு காரில் வந்தார் .

1911- ல் தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் பொது மக்களுக்கான பஸ் சேவை தொடங்கியது . அதே ஆண்டு மதுரையில் ஆரம்பமானது டி . வி . எஸ் . நிறுவனம் . அடுத்த ஆண்டே மதுரையில் பஸ் போக்குவரத்தையும் ஆரம்பித்தது டி . வி . எஸ் . நிறுவனம் . அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் இரு வேறு ஊர்களுக்கு இடையிலும் பஸ் போக்குவரத்து துவங்கியது .

இந்நிலையில் 1929- ம் ஆண்டில்தான் சென்னையில் கால் பதித்தது ' ரானே நிறுவனம் . மகாராஷ்ட்ராவில் இருந்த இந்நிறுவனம் சென்னைக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் டி . ஆர் . கணபதி அய்யர் . கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1892- ல் பிறந்தார் கணபதி அய்யர் . அந்த காலத்தில் அவரால் அதிகம் படிக்க முடியவில்லை என்றாலும் டைப்ரைட்டிங்கிலும் ஷார்ட் ஹேண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றார் . அவர் பெற்ற திறமைக்கு அந்த சமயத்தில் கேரள மாநிலத்தில் பெரிய தேவை இருக்கவில்லை . எனவே , மும்பைக்குச் சென்றால்தான் வேலை கிடைக்கும் என்று அங்கு போனார் . மும்பையில் ஐலேண்ட் அண்ட் கோ என்கிற ஆட்டோமொபைல் கம்பெனியில் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

அடுத்து , 1920- ல் ரானே ஆட்டோமொபைல் நிறுவனத்தில் கார் விற்பனை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் கணபதி அய்யர் . வாமன்ராவ் ரானே என்கிற மகாராஷ்ட்ராகாரர் ஆரம்பித்த நிறுவனம்தான் ரானே . இந்நிறுவனத்தில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே தன் கடுமையான உழைப்பினால் போர்டு உறுப்பினராக ஆகுமளவுக்கு உயர்ந்தார் கணபதி அய்யர் .

ஆனால் , சற்றும் எதிர்பாராத விதமாக வாமன்ராவ் ரானே தன்னுடைய இளவயதிலேயே காலமானார் . அவருடைய மகனோ சிறுவனாக இருக்கவே , அடுத்து கம்பெனியை எப்படி நடத்திச் செல்வது என்கிற கேள்வி உண்டானது . அப்போது கணபதி அய்யர்தான் , ஆட்டோமொபைல் தொழிலுக்கு இருக்கும் எதிர்காலத்தை எடுத்துச் சொல்லி , கம்பெனியைத் தொடர்ந்து நடத்தச் செய்தார் . ரானே கம்பெனியின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டார் . 1928- ல் ரானே நிறுவனம் தனது கிளைகளை கொல்கத்தா , டெல்லி போன்ற நகரங்களில் தொடங்கியது .

1929- ல் சென்னையில் தனது துணை நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டது ரானே . அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கணபதி அய்யர் . 1930- ல் அமெரிக்காவில் ' கிரேட் டிப்ரஷன் ஏற்பட்டதால் உலகம் முழுக்க பிஸினஸ் படுத்திருந்தது . ஆனாலும் , கணபதி அய்யர் சோர்ந்து போகாமல் துடிப்போடு வேலை பார்த்ததன் விளைவு , முதலாம் ஆண்டு முடிவிலேயே 12.5 சதவிகித டிவிடெண்ட் அளித்தார் .

மும்பை ரானே நிறுவனமும் கணபதி அய்யரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம் அது என்பதால் கணபதி அய்யரிடம் ஐம்பது சதவிகித பங்குகள் இருந்தது . ஆரம்பத்தில் ஃபோர்டு கார் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது , கார் உதிரிபாகங்களை விற்றது என வேகமாகத் தொழிலை வளர்த்தார் கணபதி அய்யர் .

ஆனால் , சற்றும் எதிர்பாராதவிதமாக அடுத்த இரண்டு ஆண்டிலேயே மும்பையில் இருந்த ரானே நிறுவனம் சென்னை நிறுவனத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டது . இதனால் சென்னை ரானே நிறுவனத்தில் மும்பை நிறுவனம் வைத்திருந்த பங்குகளை 2,000 ரூபாய் தந்து வாங்கிக் கொண்டது .  

தாய் நிறுவனம் தந்துவந்த நிதி ஆதரவை தற்காலிகமாக இழந்தாலும் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் , அதாவது 1936- க்குள் தனது சென்னை ரானே நிறுவனத்தை சீர்படுத்திவிட்டார் கணபதி அய்யர் . கூடவே , அப்போது சென்னையில் பெரும் பணக்காரர்களாக இருந்த பலரையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டு , அவர்களுக்கும் பங்குகளை அளித்தார் . அழகப்பா செட்டியார் , சிதம்பரம் செட்டியார் என பல முக்கியமானவர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் . இதனைத் தொடர்ந்து கம்பெனியின் மூலதனம் 7 லட்ச ரூபாயாக உயர்ந்தது . சென்னையில் தொடங்கப்பட்ட ரானே நிறுவனத்தை நிர்வகிக்கும் மேனேஜிங் ஏஜென்ட் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார் .  

1937- ல் பப்ளிக் இஸ்யூ மூலம் 5.2 லட்சம் பங்குகளை வெளியிட்டார் . கராச்சி , சிந்து , மும்பை , கோட்டயம் என பல்வேறு நகரங்களில் இருந்து பங்குகளை வாங்கினார்கள் . இதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் , புதுச்சேரி ஆகிய ஊர்களிலும் கிளைகளைத் திறந்தது ரானே நிறுவனம் . உலக அளவில் முக்கியமான கார்களின் உதிரிபாகங்களை விற்க ஆரம்பித்தார் கணபதி அய்யர் . சிம்சன் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ரானேவின் வாடிக்கையாளராக ஆனது .

ஆட்டோமொபைல் தொழிலோடு கணபதி அய்யர் திருப்தி அடைந்துவிடவில்லை . புதிதாக இன்ஷூரன்ஸ் பிஸினஸிலும் இறங்க நினைத்தார் . காரணம் , அந்த சமயம் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்தன . ஆனால் , அவரது யோசனைக்கு ரானே கம்பெனி போர்டு ஒப்புதல் தரவில்லை . என்றாலும் , 1938- ல் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியாக வான்கார்ட் பயர் அண்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் மற்றும் வான்கார்ட் பிராவிடண்ட் அஸ்யூரன்ஸ் என இரு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஆரம்பித்தார் . மெட்ராஸ் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற நிதி நிறுவனத்தின் புரமோட்டராகவும் இருந்தார் .

இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் ஆக்ரோஷமாக ஆரம்பமானது . பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து பிஸினஸ் செய்ய முடியாமல் வெளியேற , சிம்சன் , டி . வி . எஸ் ., ரானே போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே பிழைத்துக் கொண்டன . ரானேவிடம் நிறைய பணமும் கைவசமிருந்தது . நிறுவனத்தை மேற்கொண்டு விரிவுபடுத்த வழியில்லாதபோது பணத்தைக் கையில் வைத்திருப்பதற்குப் பதிலாக பங்குகளை பைபேக் செய்யலாமே என்று கணபதி அய்யர் சொன்னதன் விளைவு , சுமார் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்கியது ரானே நிறுவனம் . தவிர , ரானே நிறுவனம் வெளியிட்ட உரிமைப் பங்குகளை கிடைத்த போதெல்லாம் வாங்கினார் . இதனால் போர் முடிந்து பிஸினஸ் களைகட்டியபோது கம்பெனிக்கு கிடைத்த லாபமும் அதிகரித்தது ; இவரது சொத்து மதிப்பும் உயர்ந்தது .

புதுப் புது திட்டங்கள் , பிஸினஸ் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் என தீவிரமாகத் தொழில் செய்துகொண்டிருந்த சமயம் ... 1946- ல் மாரடைப்பு காரணமாக இறந்து போனார் கணபதி அய்யர் . ஆனாலும் , கணபதி அய்யர் உருவாக்கி வளர்த்த ரானே நிறுவனத்தை அநாதரவாக விடாமல் அவரின் மகன் டி . ஜி . கோதண்டராமனும் , மகள் சரஸ்வதியின் கணவர் எல் . லட்சுமிநாராயணும் சேர்ந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர் . ரானே நிறுவனம் கடந்த ஆண்டுதான் தனது 75- வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது . இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்த நிறுவனம் செழிப்போடு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை !
Please DO NOT print this e-mail or attachment(s) unless it is absolutely necessary
DISCLAIMER
This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient(s), please reply to the sender and destroy all copies of the original message. Any unauthorized review, use, disclosure, dissemination, forwarding, printing or copying of this e-mail, and/or any action taken in reliance on the contents of this e-mail is strictly prohibited and may be unlawful. Any personal views or opinions presented in this e-mail are solely those of the author and do not necessarily represent those of Rane Group. As the integrity and security of this e-mail cannot be guaranteed on the internet,  Rane Group  accepts no liability for any damage caused by this e-mail.


Related Entries

3
votes
Think about it.
by Nma.Nadaf on Jan/02,2012 ( diamond user)
102
votes
Sad truth about the future.
by Blue on Aug/12,2014 ( diamond user)
458
votes
Random facts about everything.
by Regikumar Chandran on Feb/16,2012 ( diamond user)
50
votes
Please forward until everyone knows about this and it stops !!
by Prasanna A on Apr/24,2012 ( diamond user)
79
votes
Interesting facts about our body.
by Ritvik Ohri on Jun/28,2012 ( diamond user)
92
votes
All without you even thinking about it.
by Toddler13 on Jan/15,2014 ( diamond user)
104
votes
10 points about Russian built 9K37 BUK missle that shot down MH17.
by Ramesh A on Jul/19,2014 ( diamond user)
382
votes
All about kids and pets.
by Regikumar Chandran on Aug/28,2011 ( diamond user)
238
votes
Be Aware about Maggi.
by Deepa .Favourite on Aug/30,2011 ( gold user)
52
votes
Be Aware about Maggi Noodles...
by Ramesh A on Nov/26,2012 ( diamond user)
77
votes
Facts about Indian Army.
by Nma.Nadaf on Sep/12,2014 ( diamond user)
327
votes
Women's GK about cars. [10 STAR Rating]
Admin on Feb/18,2007  
26
votes
20 facts about human body.
by Toddler13 on Oct/27,2014 ( diamond user)
91
votes
Think about these..
by Raj Kumar on Aug/02,2014 ( diamond user)
159
votes
10 facts about you.
by Raj Kumar on Apr/16,2014 ( diamond user)
134
votes
Think about Incredible INDIA!
by Asvin Deepak on Mar/10,2011 ( diamond user)
99
votes
Strange thing about the news...
by Panther on Jul/21,2014 ( diamond user)
24
votes
Fact about the letters a b c & d.
by Nma.Nadaf on Jun/02,2011 ( diamond user)
50
votes
Few Facts about Gold.
by Toddler13 on Oct/22,2011 ( diamond user)

Random PicsShare this with friends

Your Name:
Your Email:

Friends Email: (Atleast 1)


Subscribe for more Fun

Receive best posts in your inbox.

Confirm email
Your EmailAdd Your Comments

comments powered by Disqus
User generated content. Copyright respective owners wherever applicable. Contact - admin at binscorner